கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் உர்ஜித் (URJITH 25) நிகழ்ச்சி தென்னிந்தியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ,மாணவிகள் பங்கேற்பு!!!

sen reporter
0

கோவைபி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள்மகளிர்கல்லூரி,ஜி.ஆர்.ஜிமேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக (GRG School of Management Studies) இந்த ஆண்டிற்கான மேலாண்மை திறன் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உர்ஜித் 25. (URJITH 25). எனும் தலைப்பில்,பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரி சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில், நடைபெற்ற இதில்,தென் இந்தியா முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து இளங்கலை மற்றும் முதுநிலை மாணவ மாணவியர்கள்ஆர்வமுடன்கலந்துகொண்டனர்.தலைமைத்திறன், படைப்பாற்றல், பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை திறன்கள் தொடர்பாக நடைபெற்ற இதில்,பல்வேறு துறைகளில் மாணவர்களின் திறன்களை பரிசோதிக்கும் விதமாக போட்டிகள் நடைபெற்றன.முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி துவக்க விழாவில்,ஆர்.வி.எஸ். கல்வியியல் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் கணேஷ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் வழியாக போட்டிகள் நடைபெற்ற நிலையில்,இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் மற்றும் குழுவினருக்குபரிசுகள்வழங்கும்விழாநடைபெற்றது.பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஹாரத்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக (NASSCOM) நாஸ்காம் நிறுவனத்தின் இயக்குனர் உதய் சங்கர் கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர்,சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவதில் கல்வி பெரும் பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் பணப்பரிசுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top