வேலூர்:பேரணாம்பட்டு நகர அ.ம.மு.க.சார்பில் கழக தலைவர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!!
12/13/2025
0
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகச் செயலாளர் எம். சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர். ரமணி ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர். வெங்கடேசன், நகர இணை செயலாளர் எஸ். திலீப் குமார், எஸ். ரூபிசோக்கன், நகரமன்ற துணை செயலாளர் பூக்காரர் அப்துல் கரீம், நகர அவைத் தலைவர் அப்துல் மஜித், நகர துணைச் செயலாளர்கள் ஆர். தேவராஜ் ,ஆர். ராணி ரங்கசாமி, நகர பொருளாளர் வழக்கறிஞர் எல். கண்ணதாசன், மாவட்ட, நகர பிரதிநிதிகள் எம். ஷாதுல்லா பாஷா, டி. நீலாவதி, எம். அஸ்லம் பாஷா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
