போடி தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலையில் பெருமாள் கோவில் அருகே சுமார் 120அடி ஆழமுள்ள கிணற்றில் ஆடு ஓன்று தவறி விழுந்துவிட்டதை அறிந்த ஆட்டின் உரிமையாளர் ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் கிணற்றின் உள்ளே இறங்கினார்.இதனை தொடர்ந்து ஆட்டின் உரிமையாளரும் கிணற்றில் மாட்டிக்கொண்டு அவரின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஆட்டையும், அதன் உரிமையாளரையும் உயிருடன் மீட்டனர். உயிருடன் மீட்ட போடி தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.