திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்து பட்டாபிராமில் மூன்று கட்சிகள் வெவ்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாலும் மூன்று கட்சி கொடிகளும் ஒரே மின் கம்பத்தில் கட்டியதால் பொதுமக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்
இந்த மூன்று கட்சிகளும் பார்த்தால் எதிர்க்கட்சிகளாகவே தெரியும். மூன்று கட்சிகள் என்னவென்று பார்த்தால் பாரதிய ஜனதா கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் புரட்சி பாரத கட்சி இவை மூன்று கொடிகளையும் ஒரே மின்கம்பங்களில் கட்டியதால் இப் பகுதி மக்கள் இவர்கள் ஒரே கூட்டணியில் சேர்ந்து விட்டார்களா என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்
பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி சேர்ந்தால் திமுக ஆவடி பகுதியில் டெபாசிட் கூட பெற முடியாது என்றும் சிலர் பேசி வருகின்றனர் சில இடங்களில் கொடி வைப்பதிலும் பேனர்கள் வைப்பதிலும் தகராறுகள் ஏற்பட்டு வெட்டுக்குத்தளவுக்கு சென்றாலும் கூட இந்த பகுதியில் ஒரே மின் கம்பத்தில் மூன்று கட்சிகள் கொடி ஒன்றாக பரப்பதை நினைத்து சிலர் ஆச்சரியமாகவும் பார்த்தனர்