நாகர்கோவில் மாநகராட்சியில் ₹45.21 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி
28-வது வார்டுக்குட்பட்ட பஜனை மடம் பகுதியில் ₹5 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் புதுப்பிக்கும் பணி,
வணிகர் வடக்கு தெருவில் ₹2.5 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய பாலத்தின் பக்க சுவர் கட்டும் பணி, ஆசாரிமார் வடக்கு தெருவில் ₹5.71 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் குறுந்தெரு பூங்கா வீதி இணைப்பு சாலை கல் வெட்டை திறந்து வைத்தார்.
52-வது வார்டுக்குட்பட்ட அஞ்சிகுடியிருப்பு பகுதியில் ₹7 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணியையும்
51-வது வார்டுக்குட்பட்ட காமச்சன்பரப்பு பகுதியில் ₹10 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியையும்
43-வது வார்டுக்குட்பட்ட வடக்கு தெற்கு நடு தெரு பகுதிகளில் ₹15 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும்
நாகர்கோவில் மாநகரட்சி மேயர் ரெ மகேஷ் தொடங்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன் மாமன்ற உறுப்பினர்கள் அனந்த லெட்சுமி, ரமேஷ், விஜயன், ஜெயவிக்ரமன், சுகாதார ஆய்வாளர் ஜான், ராஜேஷ், தொழில்நுட்ப உதவியாளர்கள் பாஸ்கர், அரவிந்த் பகுதி செயலாளர்கள் ஜீவா, சேக் மீரான்,வட்ட செயலாளர்கள் முத்து கிருஷ்ணன், குணசேகரன், லிங்கேஷ், ஜெயகிருஷ்ணன், இளைஞர் அணி அகஸ்தீசன், சரவணன், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன் ஆரோக்கிய வினோத் சாம்லெட் சசி ராதாகிருஷ்ணன் சுதாகர் அந்தோணி உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.