நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 8 வது மற்றும்,9 வது வார்டு பகுதிகளில் மாநகர மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம்52 வார்டுகள் உள்ளன. புதியதாக உருவாக்கப்பட்ட. இந்த மாநகராட்சியில் ஆளூர் பஞ்சாயத்து தெங்கம்புதூர் பறக்கை புத்தளம் பகுதிகள் இணைக்கப்பட்டன. புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஏற்கனவே நகராட்சி பகுதியாக இருந்த பகுதிகளில் மேயர் மகேஷ் தினமும் காலையில் வார்டு வார்டாக கவுண்சிலர் மற்றும் ஆணையர் பொறியாளர் சுகாதார அதிகாரி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
வழக்கம் போல் இன்று 7 ம் தேதி காலை 8 மற்றும் 9 வது வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில், திருப்பதி நகர் டவுண் ரயில் நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சாக்கடை வசதி பொது குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளையும் மனுக்களையும் பெற்றுக்கொண்டதோடு பராமறிப்பு இன்றி கிடக்கும் பூங்காவை சீரமைக்கவும் அதை பொதுமக்களே பாதுகாக்கவும் அறிவுறுத்தினார். உடன் கவுண்சிலர்கள் ராமகிருஷ்ணன், சேகர் பொறியாளர் பாலசுப்பிரமணியன் வேல்முருகன் மாநகர அவைதலைவர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.