திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை பணிகளுக்காக ரூ 8 லட்சம் நிதியை பொதுமக்கள் சார்பில் மேயர் N.தினேஷ்குமாரிடம் மதிமுக கவுன்சிலர் R.நாகராஜ் வழங்கினார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு தொழிலதிபர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து மாநகராட்சி பள்ளிகள் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் சுகாதார பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உறுதுணையாக இருந்து நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டுக்குட்பட்ட இபி காலனி இரண்டாவது விதியில் 50 அடி ரோட்டில் தார் சாலை அமைக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது ஆனால் அங்கு ஐந்து மீட்டர் அளவிற்கு ரோடு சிறியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 50 அடி ரோடு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர் இதில் சாலையை மேலும் 4 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி இடம் கோரிக்கை விடுத்தனர் இந்த அகலப்படுத்தும் சாலைக்கு உண்டான செலவினங்கள் மொத்த தொகை ரூ 24 லட்சத்தில் ஒரு பங்காக ரூ 8 லட்சத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குடியிருப்போர் நல சங்க ம் சார்பில் மாநகராட்சிக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது
அதன்படி ரூ 8 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 24 வது வார்டு மதிமுக கவுன்சிலர் R.நாகராஜ் மேயர் N.தினேஷ் குமாரிடம் வழங்கினார்.அப்பொழுது முதலாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்