கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி அலுவலக கட்டிடத்தில் ஆதார் இ- சேவை மையம், பிறப்பு இறப்பு பதிவு மையம், நகராட்சி அலுவலகம் என எப்போதும் பரபரப்பாக பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இந்த அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வைத்து விட்டு சாவியை எடுக்க மறந்துவிட்டார். பின்னர் அலுவலகத்துக்குள் சென்ற அவர் மாலையில் பைக்கை எடுக்க வந்தார். அப்போது பைக்கின் முன் பகுதியில் குரங்கு ஒன்று இருந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த ஊழியர் குரங்கை துரத்தினார்.
.இதனால் கடுப்பாகி போன குரங்கு பைக்கின் சாவியை எடுத்துக்கொண்டு அருகில் நின்ற மரத்தில் ஏறி கிளை மீது அமர்ந்து கொண்டது. உடனே சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர். மேலும், கட்டைகளை எடுத்து வீசி பயமுறுத்தினர். ஆனால், மரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த குரங்கு சாவியை மரத்தின் ஒவ்வொரு கிளைகளிலும் கொண்டு வைப்பதும், எடுப்பதும் என போக்கு காட்டியது. மேலும், சாவியை இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி வைத்தவாறு பொதுமக்களையும் அந்த ஊழியர்களையும் வெறுப்பேற்றியது.