மாநகர கவுண்சிலர் கட்சியில் இருந்து விலகல்

sen reporter
0

 தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் நடந்த குமரி சங்கமம் நிகழ்வில் மாநகர கவுண்சிலர் ஒருவரை புறக்கணித்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் அக்கட்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து அவர் தன்னை திமுகவில் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரச்சனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையும் தோல்வியை தழுவின.




நாகர்கோவில் நாகராஜா திடலில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

 கூட்டத்திற்கு வந்த அண்ணாமலையை சந்திக்கவும்  மேடையில் இடம் ஒதுக்காத  நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் ரோஸிட்டா திருமால் நாகர்கோவில் கிழக்கு மாநகர பொருளாளர் திருமால் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், மாவட்ட தலைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர். 

இது பாரதிய ஜனதாவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் திருமால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டம் முதலில் ஜுன் 2ம் தேதி  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சங்கமம் நடைபெறும் இடம்   மாநகர 24-வது வார்டுக்குட்பட்ட பகுதி ஆகும். 

இந்த வார்டு பிஜேபி கவுன்சிலர் ரோஸிட்டா திருமால் வெற்றி பெற்ற பகுதி.  இந்த விழா விற்கான அழைப்பிதழிலில்  கவுண்சிலர் ரோசிட்டா திருமால் பெயர் இடம்பெறவில்லை இது குறித்து அவர் மாவட்ட பிஜேபி நிர்வாகிகள் இடம் கேட்ட போது தவறு நடந்துவிட்டது.  நீங்கள் மேடையில் அமரவும் பரிசு பொருள் கொடுக்கவும் ஏற்பாடு செய்கிறோம் என்றதும் சமாதானம் அடைந்த அவர் பிரச்சனையில் இருந்து வெளியே வந்தார்.  ஆனால் துரதிஷ்டவசமாக ஒரிசா ரயில் விபத்தால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு ஜுலை 4 ம் தேதி நடந்தது. 

இந்த நிலையில் றோசிட்டா திருமால் அண்ணாமலைக்கு உயர ரோஜாமாலை ஏற்பாடு செய்து வழங்க காத்திருந்தார். துரதிஷ்ட வசமாக அவர் மேடையில் கூட ஏற்றப்படவில்லை. மாலையும் பெற்றுகொள்ளவில்லை.   மாநில தலைவர் அண்ணாமலைக்கு அணிவிக்க  ஆளுயர ரோஜாப்பூ மாலை மற்றும் செங்கோலும் தயார் செய்து வைத்திருந்தார் ஆனால் ரோஸிட்டாவை மேடையில் அனுமதிக்க வில்லை ஆனால் மேடையில் .மாநில பொதுசெயலாளர் பாலகணபதி உறவினர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர். குறிப்பிடதக்கது.  

இதனால் அண்ணாமலைக்கு போட வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலை மற்றும் செங்கோலை வழங்க முடியவில்லை. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலை யில் தான் அண்ணாமலைக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலையை கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் ஊர்வலமாக சென்று வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு அணிவித்துள்ளனர். பின்னர் கோஷமிட்டு கலைந்து சென்றனர். இன் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர்கள் பதவி விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 முன்னதாக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சமாதானம் செய்தார் ஆனால் அதை கவுண்சிலர் றோசிட்டாவும் அவரது கணவர் திருமாலும் ஏற்றுகொள்ளவில்லை. தற்போது  அவர்கள் தங்களது கட்சி பதவிகளை துறந்துள்ளனர். மீண்டும் அண்ணாமலை முன்னிலையில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்ட்தை அவர்கள் நிராகரித்து விட்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top