குமரி மாவட்டம் நாகர்கோயில் அருகேயுள்ள ராஜக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜரெத்தினம் (57) இவர் கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார்., நாகர்கோயில் செட்டிகுளம் பகுதியில் இன்று (5)பணிபுரிந்துவிட்டு , கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வந்தபோது திடிரென்று சரிந்து கீழே விழுந்தார்.
உடனே காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். காவலரை சோதித்த பார்த்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்து போனார் என தெரிவித்தனர். பின்னர் சோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நாளை 6 ம் தேதி காவல்துறை மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.