ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி!
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் அருகே சாக்கடை பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்துகொண்டிருப்பத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இப்பகுதியில் சிறியவர்களோ அல்லது வயதானவர்களோ தவறி சாக்கடை பாலத்திற்குள் விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விரைவாக சாக்கடை பாலம் கட்டும் பணி முடிவடையும் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே அளிப்பதாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மேல் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை பாலம் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.