மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம் என்று சொன்ன திமுக ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்கப்படவில்லை என்றும் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகத்தை கொண்டு வருவோம் என்று சொன்ன திமுக வெறும் செங்கலை மட்டுமே தந்திருக்கிறது என்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பாஜக சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செங்கலை காட்டி மேற்கண்ட விளக்கத்தை கேட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குமரி சங்கமம் என்ற நிகழ்வு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்றது நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர்மோடி ஒன்பது ஆண்டுகள் அற்புதமாக ஆட்சி செய்து விட்டு பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார் மீனவர்கள் இல்லாமல் எந்த ஒரு நாடும் வளர்ச்சி அடையாது முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் மீன்வளத்துறை அமைச்சகத்தை உருவாக்கியது பிரதமர் மோடி தான் அதிலும் அதில் ஒரு இணை மந்திரியாக தமிழகத்தைச் சேர்ந்த முருகனை நியமித்து பெருமை சேர்த்து தந்திருக்கிறார் .பிரதமர் மோடி ..
2014க்கு வரை 81 மீனவர்கள் இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லப்பட்டார்கள் ஆனால் கடந்த 9 ஆண்டில் எந்த மீனவரும் சுட்டுக் கூட கொல்லப்படவில்லை நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது நாடாளுமன்றம் முன்பு பிரதமர் சாஸ்டாங்கமாக விழுந்து எழுந்தார் இதை அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் மோடி மூச்சு இருக்கா உயிர் இருக்கா என கேட்டு உள்ளார் வரும் தேர்தலில் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் .
ஒரு அமைச்சர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தாருவதாக ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கிறார் திமுக ஆட்சி வந்த பின்பு ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலமாக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த அரசு ஆகவே தான் அமுலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டதும் ஆஸ்பத்திரி நோக்கி ஓடுகிறார் அரசு மருத்துவமனை சரியில்லை என்று தனியாக மருத்துவமனை வேண்டுமென்று தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் அரசு மருத்துவமனை அது ஏழை மக்களுக்கு உரியது என்று கூறியிருக்கிறார் .
தற்போது தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு சங்கீதா இட்லி சாப்பிடுகிறார். ஒரு ஊழல்வாதியை இந்த தமிழக அரசு காப்பாற்ற முயற்சி எடுக்கிறது பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் நடுவில் அமர்ந்திருந்த சரத் பவர் நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம் எங்கள் ஒற்றுமையை பார்த்து மோடி அஞ்சுகிறார் என்றும் கூறினார் அவர் இப்போது 40 எம்எல்ஏக்கள் உடன் பிஜேபிக்கு வந்து விட்டார் தனக்கு வயது முதிர்ந்து விட்டது என்றும் இனிமேல் தலைமை பொறுப்புக்கு பிரபில் பட்டேலை நியமிக்கிறேன் என்று கூறினார் இப்போது பிரபில் பட்டேலும் பிஜேபிக்கு வந்து விட்டார்.
அந்தக் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் இருந்த நமது முதலமைச்சருக்கு உதறல் வந்துவிட்டது. பெங்களூர் கூட்டத்திற்கு போய் விடாதீர்கள் மக்கள் ஆதரவு இருந்தால்தான் ஒரு ஆட்சி அமைக்க முடியும் அது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு துணை முதல்வராக இருக்கும் டி கே சிவகுமார் காவிரி தண்ணீரை தர மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில் பெங்களூரில் நடைபெறும் கூட்டத்திற்கு வடகறி சாப்பிடவா நீங்க போகிறீர்கள் மேகதாது அணையை கட்டிய தீருவோம் என்றும் சிவகுமார் சொல்லி இருக்கிறார் சரத் பவர் உடன் 40 எம்எல்ஏக்கள் சென்றது போல் திமுக எம்எல்ஏக்கள் செல்ல வேண்டுமா என்ன? வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களை பெற்று ஆட்சி அமைப்போம் இமயத்திலும் குமரியிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக உறுப்பினர்கள் இருப்பார்கள் நாட்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பிரதமர் மோடி முனைந்து உள்ளார்.
இதனை ஸ்டாலின் எதிர்த்து வருகிறார் இந்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம் பெண்களே அதிகம் பயனடைவார்கள் தந்தையின் சொத்தில் அவர்களுக்கு பங்கு கிடைக்கும் அது போலவே தான் கிறிஸ்தவர்களும் பயனடைவார்கள் பொது சிவில் சட்டத்தை பற்றி எந்த புரிதலும் இல்லாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார் பொது சிவில் சட்டம் வந்தால் குமரி மாவட்டத்தில் பல நன்மைகள் நடைபெறும்
இங்கே ஒரு மேயர் இருக்கிறார் ஒருவர் அவர் பிஜேயினரை பார்த்து கையை உடைப்பேன் காலை உடைப்பேன் என்று சொல்கிறார் தற்போது நடக்கும் இந்த கூட்டத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார் பக்குவமாக சூதுனமாக இருந்து கொண்டால் நல்லது பிஜேபியினர் வன்முறை கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம் இதை அவர் புரிந்து கொண்டால் சரி மனோ தங்கராஜ் பற்றி பட்டியலில் கண்டிப்பாக வெளியிட கடமைப்பட்டிருக்கிறேன் வீடியோ கான்ஃபரன்ஸ் நடத்தியதின் மூலம் செலவு 2 கோடியே 52 லட்சத்துக்கு கணக்கு காட்டியுள்ளார்.
ஆகவே தான் இப்போது பால்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். ஆவின் பால் வளத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்று கூறினார் ஆனால் அங்கு வேலை பார்க்கும் குழந்தைகள் நாங்கள் குழந்தை இல்லையா என்று கேட்டிருக்கிறார்கள் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் அனுப்பி வைக்க நிகழ்ச்சி மாபெரும் செயல்பாடாக இருக்கும் என்று கூறினார் மேடையில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு செங்கலை காட்டி திமுக அரசு மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொன்னார்கள் இதுவரை கட்டிக் கொடுக்கவில்லை அந்த செங்கல் தான் இது தான் என்றார் மேலும் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று சொன்னார்கள்.
அதுவும் கட்டப்படவில்லை அந்த செங்கலும் இதுதான் மீனவர்களை வசதிக்காக ஒரு துறைமுகம் கூட கட்டிக் கொடுக்கவில்லை இந்த அரசு என்று குற்றம் சாட்டினார் இதையெல்லாம் நாம் சொன்னால் மதுரையில் எய்ம்ஸ் என்னவாச்சி என்று கேட்பார்கள் 2026 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி செயல்படும் இதை நீங்க பார்க்கத்தான் போகிறீர்கள் என்றார் திமுக அரசு அறிவித்து 521 வாக்குறுதியில் குமரி மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார் குமரி சங்கத்தின் போது மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு செங்கோல் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி மாநிலச் செயலாளர் மீனாதேவ் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் பொருளாளர் முத்துராமன் நாகர்கோவில் மாநகர கவுன்சிலர்கள் ஐயப்பன் தினகரன் சதீஷ் ரமேஷ் வீர சூர பெருமாள் ஆட்சியம்மாள் றோசிட்டாள் திருமால் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.