தாய் தமிழ் நாட்டிற்கு பேரறிஞர் அண்ணா பெருந்தகை அவர்களால் "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினை "தமிழ்நாடு நாள் விழா"வாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி ஆணையிட்டதைத் தொடர்ந்து ( திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "தமிழ்நாடு நாள் விழா"-வில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் வழங்கி, பாராட்டினார்.
உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கோ.சரஸ்வதி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.ஜெகதீஷ் சந்திர போஸ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கூ.பாபு, மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளூர்) திருமதி.தேன்மொழி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் திரு.ரகுகுமார், திரு.சபரிதரன், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.