கன்னியாகுமரி மாவட்டம் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக அரசு பேருந்து கழகம் மூலம் தினமும் 600 க்கு மேற்பட்ட பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சில பேரூந்துகளில் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. இதை சீர்செய்ய வலியுறுத்தியும் அதிகாரிகள் மெத்தன போக்கை கையாளுவதோடு ஓட்டுனர்களை அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இன்நிலையில் நாகர்கோவில் முதல் திருநெல்வேலி வரை இயங்கும் பேரூந்து ஒன்றில் சில நாட்களாக சரியாக பிரேக் இல்லாமல் இருந்து வந்தாகவும் அரசு அதிகாரிகள் இந்த வாகனத்தை ஓட்டுங்கள் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர் இதனால் சலிப்படைந்த ஓட்டுனர் கென்னடி பிரேக் இல்லாத பேருந்து என்னால் ஓட்ட முடியாது எனக் கூறி நாகர்கோவில் டி.ஆர்.ஓ அலுவலகத்தில் பேருந்தை ஒப்படைத்துள்ளார் ,இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பணி விதிமுறை மீறியதாக ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.