தாய் தமிழ் நாட்டிற்கு பேரறிஞர் அண்ணா பெருந்தகை அவர்களால் "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினை "தமிழ்நாடு நாள் விழா"வாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி ஆணையிட்டதைத் தொடர்ந்து இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "தமிழ்நாடு நாள் விழா"-வில் செய்தித் துறை சார்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சிய.ர்ஆல்பி ஜான் வர்கீஸ் . அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளூர்) தேன்மொழி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிதரன், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.