குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான சுவாமிஸ் சமையல் பொடி தாயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலீம் இதே கட்டிடத்தில் இருந்து நிறுவனத்தின் மொத்த விற்பனையும் நடைபெற்றது.
இன்று காலை நிறுவன கட்டிடத்தில் இருந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது.சம்பவம் அறிந்த தீயணைக்கும்படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருவதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.