தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே புதுப்பட்டியில் உள்ள 8வது வார்டு சிஎஸ்ஐ தெருவில் நீர்த்தேக்க தொட்டி இருந்தும் யாருக்கும் பயன்படாமல் பெயரளவில் மட்டுமே உள்ளது.
இதுகுறித்து 8வது வார்டு பொதுமக்கள் பலமுறை புதுப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பேரூராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும்,வார்டு கவுன்சிலரும் கண்டும், காணாமலும் உள்ளதாக கூறுகின்றனர்.
தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நடவடிக்கை எடுத்து 8வது வார்டில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.