குமரி திமுக கிழக்கு மாவட்ட தோவாளை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகியபாண்டியபுரம் பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டம் அழகியபாண்டியபுரம் பேரூர் கழகத்தின் செயலாளர் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
![]() |
தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பிராங்கிளின் முன்னிலை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகர மேயருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசணைகள் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ், பூதப்பாண்டி பேரூர் செயலாளர் ஆலிவர் தாஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.