மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.7.2023) செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை,மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு,
அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சரும் இணை வேந்தருமான முனைவர் க. பொன்முடி,மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஆ. கார்த்திக், இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப.,
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வேல்ராஜ்,எம்.ஐ.டி. கல்லூரியின் முதல்வர் முனைவர் பிரகாஷ், எம்.ஐ.டியின் நிறுவனர் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி பிரேமா சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.