தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட உ.அம்மாப்பட்டி ஊராட்சியின் கீழ் உள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தில் குடிநீரானது சுத்திகரிப்பு செய்யப்படாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதால் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், மற்றும் வயிற்றுபோக்கு காரணமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலமுறை இதுகுறித்து கிராம பொதுமக்கள் உ.அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக கிராம பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும்,ஆய்வு மேற்கொள்ள வேண்டிய சுகாதார ஆய்வாளர் இப்பகுதிகளுக்கு வருவதே இல்லை என்றும் அரசு சம்பளம் வாங்கிகொண்டு ஏசி ரூமில் அமர்ந்து தன் பணியை செய்யாத சுகாதார ஆய்வாளர் எங்கே? என கிராம பொதுமக்கள் புலம்புகின்றனர்.
பச்சிளம் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு யார்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என கிராம பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர். இதனை தொடர்ந்து, நோய்த்தொற்று ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உ.அம்பாசமுத்திரம் கிராம பொதுமக்கள் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.