நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகா உப்பட்டி சேலைக்குண்ணா பகுதியை சேர்ந்த செரிப் என்பவரின் எருமை வயலில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது மின் கம்பத்திலிருந்து மின்கம்பி அருந்து எருமையின் மீது விழுந்தது. இதில் எருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தகவல் அறிந்து மின்சார வாரிய பொறியாளர் அவர்களும் கால்நடை மருத்துவர் ராஜராஜன் கிராம நிர்வாக அலுவலர் அசோகன் மற்றும் வனத்துறையினர் அதிகாரிகள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கலைக் கோவில் நேரில் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் கால்நடை இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என மின்வாரியத்துறை உறுதி அளித்தனர் அதனைத் தொடர்ந்து எருமையை நல்லடக்கம் செய்யப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.... ..
நீலகிரி மாவட்ட செய்தியாளர்
Dr.G.ரஜினிகாந்த்