மணிப்பூரில் நடந்த பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக மகளிர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் நடந்தது.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு ஜாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது கடந்த மூன்று மாதமாக இங்கு நிகழும் வன்முறைகள் இதுவரை முற்றுப்பெறவில்லை.
இந்த நிலையில் உயர் ஜாதி பெண்ணைகீழ் ஜாதியினர் கொலை செய்துவிட்டதாக வந்த வதந்தி செய்தியால் இரண்டு பெண்கள் நிர்வாணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு வண்புணர்வு செய்யப்பட்டனர்.
77 நாட்களுக்கு பின்பு இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரவலாகியது இதை எடுத்து மீண்டும் கலவரம் வெடித்தது இந்த சம்பவம் நடந்து முடிந்து இரண்டு மாதம் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை சமூகவலை தளத்தில் வந்த பிரச்சினையை அடுத்து மீண்டும் விஸ்வரூபம் ஆனது இந்த பிரச்சனை தொடர்பாக மணிப்பூர் மாதத்தில் ஆளும் பாஜக அரசு ஒப்புக்காக இருவருவரைக் கைது செய்தது.
ஒன்றிய அரசு இதுவரை எந்தவிதமான கண்டன அறிக்கையயோ இது தொடர்பான நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை இதே போல் மணிப்பூர் அரசும் எந்தவிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாத காரணத்தினால் இவ்விரு அரசுகளை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில் மாநகர மேயர் மகேஷ் துணை மேயர் மேரி பிரின்சி லதா மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் லதா கலைவாணன் நாகர்கோவில் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் அம்மு அன்றோ ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மணிப்பூர் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதோடு மகளிர் அணியினர் கருப்பு துணியால் கண்களைக் கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த் மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை மாவட்ட பொருளாளர் கேட்சன்அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன் பசலியான் சரவணன் சிடி சுரேஷ் முருகேசன் சிஎன் செல்வம் ராஜேஷ்குமார் ஒன்றிய செயலாளர் பாபு லிவிங்ஸ்டன் பிஎஸ்பி சந்திரா சற்குரு கண்ணன் மருத்துவ அணி துணைஅமைப்பாளர் டாக்டர் சுரேஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர் .