நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் பயன்படும் வகையில் க்யூ ஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் பொது மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் மின் கட்டணத்தையும் செலுத்தி கொள்ள முடியும் அதே நேரம் தங்கள் பகுதி பிரச்சனையைகியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் பண்ணி அனுப்பினால் உடனடியாக அதிகாரி நடவடிக்கை எடுப்பார்கள் என்று மேயர் மகேஷ் தெரிவித்தார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது இரண்டாவது கட்டமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகம் 13 ம்தேதி வியாழகிழமை நாகர்கோவில் மாநகராட்சி வைத்து நடைபெற்றது.
முகாமிற்கு மாநகர மேயர் மகேஷ் தலைமை வைத்தார் துணை மேயர் மேரி பிரின்சி லதா நகர் நல அமைப்பாளர் வேலாயுத பெருமாள் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள் மனுக்கள் பெறப்பட்ட பின் நிருபர்களிடம் பேசிய மேயர் மகேஷ் ...
குடிநீர் சொத்து வரி சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாகத்தான் அதிக. மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன . அவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக தீர்வுகளும் நடைபெற்று வருகிறது கடந்த வாரம் பெறப்பட்ட 15 மனுக்களில் 13 மனுக்கள் தீர்வு பெறப்பட்ட நிலையில் 12 மனுக்கள் ஆய்வு பணியில் இருக்கிறது என்றார்.
குறிப்பாக சொத்து வரிகள் குறைப்பு தொடர்பான மனுக்கள் வருகிறது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு 2022 தான் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது இது ஒரு சதுர அடி முதல் 600 சதுர அடி வரை 25 சதவீதமும் 601 முதல் 1200 வரை 50% 1201 முதல் 1800 வரை 75 சதவீதமும் அதற்கு மேல் 100% வரி உயர்த்தப்பட்டுள்ளது நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் கியூ ஆர் கோடு செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது முதல் முதலாக நான்காவது வார்ட்டில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது இந்த செயலி மற்ற 51 ஒரு வார்டுகளிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது நாகர்கோவில் மாநகரத்தில் உள்ள 94 ஆயிரம் வீடுகளுக்கும் இந்த செயலி செயல்பாட்டிற்கு வரும் கியூ ஆர்செயலி மூலம் மின்கட்டணம் தண்ணீர் வரி சொத்து வரி ஆகிய மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிளை செலுத்திக் கொள்ளலாம் ,
மேலும் இந்த கியூஆர் செயலி மூலம் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை ஸ்கேன் பண்ணி அனுப்பினால் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் அவர்கள் எடுக்க தாமதமாகும் வரை அந்த மனு க்யூ ஆர் செயலியிலேயே அந்த பிரச்சனை இருந்து கொண்டிருக்கும் எனவே அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் .
மாநகராட்சி நிர்வாகத்தை 117 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறது விரைவில் இதறக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.