சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் இரட்டை கம்பு வீச்சில் ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றியம், காஞ்சிர விளையைசார்ந்த தகணேசன் சந்திரா என்பவரின் மகள் செல்வி பவித்ரா முதல் பரிசான ரொக்கப்பரிசு ரூ 1 லட்சம் பெற்றார்.
பரிசு பெற்ற மாணவி பவித்ரா குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ மகேஷ் ஐ சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் ஒன்றிய செயலாளர்கள் சற்குரு கண்ணன் ரமேஷ் பாபு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மண்டல தலைவர் ஜவஹர் பகுதி செயலாளர் சேக் மீரான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்