தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிராமசாவடி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள மரத்தின் கிளைகளானது அலுவலகத்தை மறைத்து காணப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
மரத்தின் கிளைகள் அலுவலகத்தின் பெயரை மறைத்து படர்ந்து காணப்பட்டதால் குறிப்பாக,கிராமப்புற பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை தேடி அலையும் சம்பவத்தை தொடர்ந்து நமது Sen நியூஸ் செய்தியில் வெளியிட்டோம்.
இன்று நமது Sen நியூஸ் செய்தியின் எதிரொலியால் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள மரத்தின் கிளைகளானது வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் உள்ளது . இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.