தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆண்களுக்கும், பெண்களுக்குமான சிறப்பு செயற்குழு கூட்டம் திருப்பூர் கோம்பைதோட்டத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் சிராஜ்தீன், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் துணைச்செயலாளர்கள் ஷேக் பரீத், ஷாஜகான், காஜா, ஜெய்லானி, ஹனிபா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சிறுபான்மை மாணவ&மாணவிகளின் கல்வி உதவித்தொகையை பறித்த ஒன்றிய அரசை கண்டிப்பது. நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பது. வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சாதி பிரமுகர்கள் கைது செய்யப்பட வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். பொது சிவில் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.