தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டி பொதுமக்கள் கோரிக்கை ?
August 28, 2023
0
உத்தமபாளையம் பேரூராட்சி புதூர் 1வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. தற்போது வேலைப்பாடு ஏதும் நடைபெறாததால் கழிவுநீர் தேங்கி வெளியே செல்ல வழியில்லாமல் உள்ளது.தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் முன் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.