தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் துவக்கி வைத்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகேயுள்ள வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த பள்ளியில் 47 பேர் படித்து வருகின்னர் அதே ஊரில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த தீபா என்பவர் சத்துணவு சமைத்து பள்ளி மாணவர்களுக்கு பரிமாறி உள்ளார் இதை அறிந்த ஒரு தரப்பினர் பள்ளி குழந்தைகளை உணவை சாப்பிட அனுமதிக்காமல் மாற்றுச் சான்றிதழ் கொடுங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என கேட்டு அரசின் காலை உணவை புறக்கணித்து தங்களது குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர். இந்த கொடுமையை கண்டித்து இது தொடர்பாக உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன்அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய தீர்வுகண்டு சம்பந்தப்பட்ட காளிங்கராயன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு வட்டாட்சியர், ஆர் ஐ, பி டி ஓ , உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை பள்ளியில் பயிலும் அனைத்து (100 சதவீதம்) மாணவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து காலை உணவு சாப்பிடுவதை உறுதி செய்தனர். மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக இன்று காலை சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார் அப்போது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறிய போது மேற்படி பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் முழுமையாக பள்ளிக்கு காலை உணவு சாப்பிட்டு தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது என்றும் மேற்படி பள்ளியில் சமையல் பணியில் உள்ள சமையர் தீபா அவர்கள் தொடர்ச்சியாக மேற்படி பள்ளியில் தான் எவ்வித இடையூறுகள் இன்றி சமையல் பணிகள் செய்வார் என்றும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவே மேற்படி பள்ளியில் தற்போது எவ்வித பிரச்சனைகள் இன்றி சுமூகமாக பள்ளி நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.
இது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் கூறுகையில் மேற்படி பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரைவாக தீர்வுகண்டு நேரிடையாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அனுப்பி பள்ளியில் உடனடியாக நடைபெற்ற பிரச்சனைக்கு சுமூக தீர்வுகண்டு மாணவர்கள் எவ்வித பிரச்சனைகள் இன்றி பள்ளி வந்து காலை உணவு சாப்பிட்டு பாடம் பயில்வதை உறுதி செய்து மேற்படி பள்ளி சமையர் தீபா அவர்கள் தொடர்ச்சியாக எவ்வித பிரச்சனைகள் இன்றி இதை பள்ளியில் பணிகள் செய்வதை உறுதிசெய்த மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்