போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டி தேனி நகர் மக்கள் கோரிக்கை ?
8/30/2023
0
தேனி பழைய பேருந்து நிலையத்தின் அருகில் விபத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், வாகன ஒட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாரும் போக்குவரத்து காவல்துறையினர் தடுப்பு அமைத்துள்ளனர். இந்த நிகழ்வு பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும்,தேனி அல்லிநகரம் சாலையில் உள்ள கான்வென்ட் பள்ளி அருகில் போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்படுவதை கருதி கான்வென்ட் பள்ளி அருகிலும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறையினர் முன்வரவேண்டும் என தேனி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
