திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்து மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு மருத்துவம் பார்ப்பதற்கு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து செல்கின்றனர் மருத்துவர்கள் எங்கே என்று கேட்டால் உள்ளே இருக்கிறார்கள் வருவார்கள் என்று பல மணி நேரம் காக்க வைக்கிறார்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி செவிலியர்கள் மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர் ஆலோசனை கொடுத்தால் செவிலியர்கள் மருத்துவரின் உத்தரவை மதிப்பதில்லை மருத்துவரிடம் சென்று மருத்துவர் கூறியதை செவிலியர்கள் செய்யவில்லை என்று கூறினால் எங்களையே மீறி நீ மருத்துவரிடம் எங்கள் மீது புகார் கூறுகிறாயா என்று மருத்துவரிடம் செல்வதால் உங்களுக்கு நாங்கள் மருத்துவம் செய்ய முடியாது என்று கூறியும் அலட்சியமாக செவிலியர்கள் பெண்களை மிகவும் தரம் தாழ்த்தி அவதூறாக பேசுகின்றனர் சரிவர கவனிப்பதில்லை ஆகையால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் மன வேதனையுடனும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் மருத்துவமனை மீதும் மருத்துவமனையை பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? மேலும் மாவட்ட சுகாதாரத்துறை சுகாதாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் நோயாளிகளை அலட்சியப்படுத்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா மாவட்ட சுகாதாரத்துறை ?
August 26, 2023
0