நாமக்கல்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சிறு குறு தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம்
ரூபாய் 2 கோடிக்கு உற்பத்தி முடக்கம்
தொழிற்சாலைகளுக்கான நிலை மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கூறி மாவட்டத்தில் சிறு குறு தொழில் முனைவோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ரூபாய் 2 கோடிக்கு உற்பத்தி முடங்கியது.
வேலை நிறுத்தம்
தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள 430 நிலை மின் கட்ட வேண்டும் பரபரப்பு நேர கட்டணம் (பீக் ஹவர்) உயர்வை ரத்து செய்ய வேண்டும் சோலார் மேற்கூரை மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது இதற்கு நாமக்கல் மாவட்ட சிறு குறு தொழில் சங்கம் ஆதரவு தெரிவித்தது மேலும் நாமக்கல் மாவட்ட பாடி பில்டர்கள் சங்கம் கண்ணாடி கடை அசோசியேட்ஸ் சோக பாக்டரி உரிமையாளர்கள் சங்கம் தேங்காய் நார் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருந்தன திட்டமிட்டபடி நேற்று வேலை நிறுத்தம் போராட்டம் நடந்தது இது ஒட்டி சிறு குறு தொழிற்சாலைகள் லாரி பாடி பில்டர்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன
ரூபாய் 2 கோடிக்குஉற்பத்தி*முடக்கம்
இது குறித்து நாமக்கல் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டமும் மதுரையில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு தொழிற்சாலைகளும் பாடி பில்டர்ஸ் நிறுவனங்கள் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் உட்பட சுமார் 1000 தொழிற்சாலைகளும் என மொத்தம் சுமார் 3,000 தொழிற்சாலையில் மூடப்பட்டுள்ளன
நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு இழந்து உள்ளனர் மாவட்டத்தில் ரூபாய் இரண்டு கோடி அளவுக்கு தொழில் உற்பத்தி முடங்கி உள்ளது இதற்கு காரணம் நிலையான மின் கட்டணம் 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது ஆகும்
அடுத்த கட்டபோராட்டம்
இந்த மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனவே உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச கட்டணத்தை குறைக்க வேண்டும் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் அவ்வாறு செய்யவிடில் போராட்டம் தொடரும் அடுத்த கட்ட போராட்டத்தில் அனைத்து சங்கங்களும் இணைய வாய்ப்புள்ளது இவ்வாறு அவர் கூறினார் நாமக்கல் பாடிபில்டர் அசோசியேஷன் தலைவர் தங்கவேல் தேங்காய் நார் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் தசரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
