திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வலையாம்பட்டு டு வலசை செல்லும் சாலையில் உள்ள பாலத்தை பல வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது அந்த பாலம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இந்நாள்வரை நடவடிக்கை ஏதும் இல்லாததால் பொதுமக்களே ஒன்று கூடி அந்த பாலத்தின் அடியில் கற்களையும் மண்களையும் கொட்டி சரிசெய்துள்ளனர். தற்பொழுது பெய்துவரும் கனமழையால் மழைநீரானது கற்களையும், மண்களையும் அடித்து சென்றுவிட்டது.இதனை தொடர்ந்து அந்த பாலம் விழும் நிலையில் உள்ளது.
மேலும், இந்த பாலமானது வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலம் என்பதால் ஊராட்சி மன்ற தலைவி சங்கீதா மற்றும் தலைவியின் கணவரிடம் கூறியும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் மேலும் கிராம நிர்வாக அலுவலர், பிடிஒ ஆகியோரிடம் மனு கொடுத்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது ஆனால்,இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று மக்கள் புலம்புகிறார்கள்.
இப்பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற நிலையில் மாணவ மாணவிகள் அரசு உயர்நிலை பள்ளிக்கு படிப்பதற்கு செல்ல வேண்டுமென்றால் செங்கம் உயர்நிலைப் பள்ளிக்கு தான் வந்தாக வேண்டும்,
இப்படிப்பட்ட சூழலில் இந்த பாலம் உயிரை பழி கேட்கும் அளவிற்கு இருக்கின்றதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
தனியார் பள்ளி பேருந்துகளும், இந்த பாலம் வழியாக செல்வதை தொடர்ந்து விபத்து நடந்துவிடுமோ என்றும் அச்சப்படுகின்றனர். இதனால் மாணவ, மாணவியர்களுக்கு படிப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது மற்றும் அப்பகுதி மக்கள் வேறு வழியில் செல்வதென்றால் சாத்தியம் இல்லை பல கிலோமீட்டர் சுத்திவர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்
விவசாயம் அதிக உள்ள பகுதி என்பதாலும் பொதுமக்கள் அறுவடை செய்த நெல் சோளம் கம்பு காய்கறிகள் பொருட்களை அனைத்தையும் இவ் வழியாகத்தான் எடுத்துக்கொண்டு வரவேண்டும்.
இதனை கருதி தமிழக முதல்வர் நேரடி பார்வையில் உடனடியாக மாவட்ட நிர்வாகமானது பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நலன் கருதி பாலத்தை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், மேலும் உயிர் சேதம் எதுவும் நடப்பதற்கு முன்பாகவே இப்பணியை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
