பழனி நகராட்சி அலுவலகத்தில் நடந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தால் கம்யூனிஸ்ட் கட்சி துணைத் தலைவர் ஆவேசம் ?

sen reporter
0


 நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி இல்லாமல் பழனி நகராட்சி மன்றத்தில் ரகசிய கூட்டம் நடத்திய நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் ஆக்கிரப்புகளை அகற்றுவது சம்பந்தமாக பழனி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாகவும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர் பழனி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக திடீரென்று பழனி நகராட்சிஅலுவலகத்தில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பழனி நகர மன்ற துணைத் தலைவர் கந்தசாமி அவர்களுக்கு தகவல் கொடுக்காமல் அழைக்காமல் கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது அது மட்டுமில்லாமல் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்கள் இந்த தகவலை பழனி நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமிக்கு தெரியவந்தது உடனே பழனி நகராட்சி அலுவலர்களுக்கு வந்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் 



வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது அங்கிருந்த நகராட்சி ஆணையர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர் அப்போது நான் பழனி நகராட்சி துணைத் தலைவராக இருக்கிறேன் என்னை அவமானப்படுத்து வகையில் இந்த கூட்டத்தை நடத்தி உள்ளீர்கள் அப்படி என்ன ரகசியமாக இந்த கூட்டத்தை நடத்தினீர்கள் நானும் முதல்வர் கையெழுத்துப் போட்டுத்தான் துணைத் தலைவராக இருக்கிறேன் என்று எங்கள் கட்சிக்கு அவமானம் என்றும் ஆவேசமாக பேசும் வீடியோ காட்சி பழனி நகரத்தில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதை மறந்து திமுக நகர மன்ற தலைவர் இது போன்று ஆலோசனை கூட்டத்தை நடத்தியது தவறு என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் தாங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர் பழனி நகரத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிதான் முன்னின்று போராட்டம் நடத்தி வரும் நிலையில் பழனி நகராட்சி துணைத் தலைவராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது நிர்வாகிகளை அழைக்காமல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு உள்நோக்கம் இருக்கிறது என்று சந்தேகம் எழுந்து உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் பரவலாக பேசப்படுகிறது

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top