தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நூலக கட்டிடமானது இல்லாததால் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் புலம்பும் வண்ணம் வாடிக்கையாகவே தொடர்கிறது.முன்பு பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் சிறப்பான ஊராக கருதப்பட்ட உத்தமபாளையமானது , மதுரையை தொடர்ந்து பதிவுத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்ட ஊராகும்.
உத்தமபாளையமானது இப்படி பல பெருமை வாய்ந்த ஊராக மட்டுமில்லாமல், விவசாயம், சுய தொழில் நிறைந்த பகுதியாகும். இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த ஊரில் அரசுக்கு சொந்தமான நலங்கள் பல இருந்தும் இருந்தும்,வருவாய் கோட்டாட்சியர், வட்டாச்சியர்,துணை காவல் கண்காணிப்பாளர், பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை,மற்றும் அரசு மருத்துவமனைகள், கிளை சிறை, போன்ற அலுவலகங்கள் இருந்தாலும், நூலகங்கள் ஆரம்பத்திலிருந்து செயல்பட்டு வந்ததுடன் மேற்கண்ட அலுவலகங்களுக்கு பழைய கட்டிடங்கள், வாடகை கட்டிடங்கள் இயங்கி வந்த நிலையில் சமீபகாலமாக மேற்கண்ட அலுவல்களுக்கு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டு இடம்பெயர்ந்து இயங்கி வருகின்றன . கல்வியாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ள கிடைப்பதற்கு அரிய புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்கின்றன.மேலும்,
மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் புத்தக பிரியர்களின் எண்ணிக்கையும் ஏற்ப நூலக கட்டிடம் மற்றும் அதற்கான வசதிகள் இருப்பதில்லை எனவும், இதற்கு காரணம் தனியார் வாடகை கட்டிடம் என்பதற்காக விரிவாக்கம் செயல்படாத சூழ்நிலையில் காணப்படுகின்றன. உத்தமபாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படை வசதியுடன் கூடிய நூலகத் துறைக்கு சொந்தமான விரிவான கட்டிடம் வேண்டும் . சமூக ஆர்வலர்கள், வாசிப்போர் சங்கமானது இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு பல கோரிக்கைகள் வைத்து முறையிட்டும் பலன் இல்லை என நகர் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வேதனை அடைந்து வருகின்றனர்.பல்வேறு ஊர்களில் மக்கள் பிரநிதி தொகுதியில் மேம்பாட்டு நீதியின் கீழ் நூலகங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவாக நூலக கட்டிடமானது பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொது நிதியின் மூலம் நூலக கட்டிடம் வழங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி பள்ளி, கல்லூரி படிக்கும் பிள்ளைகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

