தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்ககூடிய பெரியகுளம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த மழையினால் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அருவியில் குளிக்க வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை நீக்கப்பட்டது என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் தடை நீக்கம்!!!
9/07/2023
0
.jpg)