தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்களை திரும்ப பெற வலியுறுத்தி, இந்தியக் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன .
இவற்றை செப்டம்பர் 20ஆம் தேதி, மறுமலர்ச்சி தி.மு. கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்து கடிதம் கொடுத்திருந்தார்.
நேற்று குடியரசுத் தலைவர் செயலகத்தின் துணைச் செயலாளர், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு அனுப்பியுள்ள பதிலில்,
“தங்களின் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
‘தாயகம்’
