தேனி பழைய பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் அவதி!!
9/26/2023
0
தேனி பழைய பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தேனியில் தற்போது கடுமையான வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் பேருந்துக்காக பொதுமக்கள் நிழற்குடை இல்லாமல் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் வயதானவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழலில் சுருண்டு விழும் நிலைமை தொடர்கிறது. இதுகுறித்து இன்றுவரை தேனி மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது கேலிக்கூத்தாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.பல பகுதிகளில் ஆய்வு செய்யும் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் எப்போது தேனியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிழற்குடை வசதி அமைத்து தர ஏற்பாடு செய்வார் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர். ஒட்டுமொத்த தேனிநகர் மக்களின் ஒற்றை கோரிக்கையான பழைய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நிழற்குடை வசதி அமைத்து தருவாரா என்பதே. பொறுத்திருந்து பார்ப்போம்.
.jpg)