சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீலாங்கரையில் உள்ள செந்தாமரைக் கண்ணன் தெருவில் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஒன்றாக கலந்து தெருவில் ஓடுகின்றன. இதுகுறித்து கவுன்சிலரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.தெருவாசிகள் சுகாதாரத்துறை ஆய்வாளரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.இதுகுறித்து நமது நிருபர் தெருவாசிகளிடம் கேட்டபோது இங்கு காங்ககீரிட் ரோடு போடுவதாக கூறி பலமாதங்களாக ஆகிறது. இதுவரையில் இந்த தெருவில் கருங்கள் மட்டும் கொட்டிவிட்டு
சென்று இருக்கிறார்கள். இந்த தெருவில் கொசு மருந்து அடிக்கவும் வருவதில்லை. கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால் தெருவாசிகள் நடக்கவும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கவுன்சிலரிடம் கேட்டபோது நாங்கள் விரைவாக செய்து தருகிறோம் என கூறிவிட்டு சென்றார்.நீலாங்காரை கார்பொரேஷன் அதிகாரிகள் பெயருக்கு மட்டும்தான் இருக்கையில் அமர்ந்துவிட்டு செல்கிறார்கள்.இந்த ரோடுபோட வேண்டும் என்றால் யாரிடம் கேட்க வேண்டும் எங்கே போயி சொல்வது என்று தெரியவில்லை என தெருமக்கள் புலம்புகிறார்கள். நீரானது தேங்கி நிற்பதால் டெங்கு மற்றும் மலேறியா போன்ற நோய்த்தொற்று பரவி உயிர்சேதம் அடைந்தால் இதற்கு பொறுப்பு கவுன்சிலரா அல்லது சுகாதாரத்துறை அதிகாரிகளா என்று பொதுமக்கள் புலம்பிக்கொண்டு செல்கிறார்கள்.
