திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கில் பைப்பானது பூசனம் பிடித்தும்,துருபிடித்தும் பல வருடங்கள் ஆகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. மேலும்,இதுவரை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் அந்த பைப்பை மாற்றாமல் இருக்கிறார்கள். இதனால் இந்த டேங்க் தண்ணீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு விஷக்காச்சல் பரவும் அபாயமும் உள்ளது.சம்பந்தப்பட்ட
ஊராட்சி நிர்வாகமும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பா.குமார் அவர்கள் இதுதொடர்பாக விசாரித்து பி டி ஓ அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
மேலும். இந்த தண்ணீரானது கற்பகாம்பாள் நகர், லண்டன் சிட்டி, சிஎஸ்ஐ காலனி, பாலசமுத்திரம், பொடாரம் பாளையம் ஆதிதிராவிடர் காலனி மற்றும் பொடாரம்பாளையம் தொடக்க பள்ளி போன்ற 9பகுதிகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.இந்த பைப்பானது துருப்பிடித்து அழுக்காக உள்ளதால் பொதுமக்கள் முகம் சுழித்து வருகின்றனர்.இதனால் டெங்கு போன்ற கொடியவகை விஷக்காய்ச்சல் உண்டாகும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும், இந்த பைப்பானது இவ்வளவு துருப்பிடித்து இருக்கிறதென்றால் டேங்க் சுத்தமில்லாமல் அழுக்காக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி பைப்பை மாற்றி அமைத்து தந்தும், டேங்கை சுத்தப்படுத்தியும் நோய்இல்லா நகரமாக மாற்ற தமிழக அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து காத்திருக்கின்றனர்..
