குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக கோரிக்கை நிறைவேற்ற படாததால் காந்தி பிறந்த நாள் தினத்தில் ஞாயம் கேட்டு ஊர் தலைவர் ராஜா தலைமையில் சாலை
மறியலில் ஈடுபட்டனர் இதை அடுத்து காவல்துறையினர் பொதுமக்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும்,போனாட்டத்தில் ஈடுப்பட்ட அருந்ததியர் இன மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக ஆரம்பித்து மோதலானது இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாராயணன் என்ற இளைஞர் தீடீரென்று தீ குளிக்க முயற்சி செய்தார், இதை பார்த்த போலீசார் அவரை மீட்டு கைது செய்தனர் இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே காலணியில் ஒரே இனத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அருந்ததியர் காலணியில் போலீஸ் பாதுகாப்பு ப போடப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)