திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் செங்கம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட மூலம் 2022-2023
அங்கன்வாடி புதிய கட்டிடம் ரூபாய் 12,61,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு கட்டிட வேலையும் முடிவடைந்த நிலையில் இன்றுவரை பயன்பாட்டுக்கு வராமல் பல மாதங்களாகவே காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் கடமைக்காக கட்டிடம் கட்டி அரசுக்கு கணக்கு காட்டியதன் பேரில் சிறுவர்,சிறுமியர் அங்கன்வாடி திறக்கப்படாமல் இன்னும் பூட்டப்பட்ருக்கும் நிலை உள்ளது.மேலும், அங்கன்வாடி வளாகத்துக்கு முன்புறத்தில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் எவ்வழியாக அங்கன்வாடிக்கு செல்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.மேலும் அங்கன்வாடி பூட்டிகிடக்கும் நிலையில் அந்த
இடமானது பராமரிப்பு இல்லாமல் காட்சியளிக்கிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடியை திறந்து குழந்தைகளுக்கான பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)