தேனி மாவட்டம் போக்குவரத்துதுறை அமைச்சர் கம்பம் டிப்போவில் ஆய்வு செய்வாரா பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!!
10/03/2023
0
கம்பம் கிளை எண் 1 கொண்ட அரசு பேருந்து கம்பம்-கோம்பைத்தொழு பேருந்தானது அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தேனி மாவட்டத்திலேயே கம்பம்-கோம்பைத்தொழு அண்ணாகர் வழித்தடம் செல்லும் பேருந்து ஒன்று தான் உள்ளது.மேலும், அந்தப் பேருந்தும் சரியாக இயங்காததால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். கம்பம்-கோம்பைத்தொழு பேருந்து டிரைவரும், நடத்துனரும் வேறு பேருந்திற்கு மாற்றப்படுவதால் அண்ணாநகர் வழிசெல்லும் பேருந்தானது அடிக்கடி நிறுத்தப்படுவதாக புகார்.கம்பம் டிப்போ மேலாளரும் பேருந்து ஓடினால் என்ன ஓடவில்லை என்றால் எனக்கென்ன என்பதுபோல் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,ஓட்டை உடைசலான பேருந்துகள் அதிகம் இயங்குவதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் புலம்பிய வண்ணமே செல்வது குறிப்பிட்டத்தக்கது. இதுகுறித்து பின்தங்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் கம்பம் போக்குவரத்து டிப்போவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
