தேனி மாவட்டம் உத்தமபாளையம் மின்சாரவாரியத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டி பொதுமக்கள் வேண்டுகோள்!!!
10/05/2023
0
உத்தமபாளையத்தில் பூந்தோட்ட தெருவிலிருந்து முத்தையா கோவில் செல்லும் சாலையில் மின்கம்பமானது கீழே விழும் நிலையில் சாய்ந்து உள்ளது.இப்பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.புதூர் பகுதிகளிலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் இவ்வழியாக செல்வதை தொடர்ந்து பள்ளிக் குழந்தைங்களுக்கு மின்கம்பத்தால் ஆபத்து வந்துவிடும் என பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்சார துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
