தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்!!!
10/06/2023
0
பழனிசெட்டிபட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தேனி கிளையில் சாலை வசதிகள் இல்லாததால் போக்குவரத்து கழக பணியாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். சாலைகள் மோசமாகவும்,குண்டும், குழியுமாக காணப்படுவதால் பேருந்து ஓட்டுனர்கள் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டும் நடவடிக்கை எடுக்க வலியுருத்தாமல் உள்ளதாக பணியாளர்கள் கூறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் முக்கிய இடமாக கருதப்படும் போக்குவரத்து கழக கிளையில் சாலைகள் கரடு, முரடாக உள்ளது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்துக்கு பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
.jpg)