தகவல் அறியும் உரிமைச்சட்டம் வார விழாவினை முன்னிட்டு போடியில் உள்ள ஐ.கா.நி மேல்நிலைப்பள்ளி மற்றும் அதனை தொடர்ந்து பங்கஜம் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு போட்டிகளானது தீயணைப்பு துறையினர் சார்பில் நடைபெற்றது.தேனி மாவட்ட அலுவலர் தீயணைப்பு செ.வினோத் அவர்கள் உத்தரவுப்படி போடி தீயணைப்பு துறையினர் பள்ளியில் பயிலும் மாணவ,
மாணவிகளுக்கு கட்டுரை போட்டி,ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தினர்.இந்த நிகழ்வானது போடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும்,இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெ.ஜெயராணி அவர்கள் பாராட்டு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கினார். போட்டிகள் வைத்து சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறையினரை பள்ளி நிர்வாகம் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

