கன்னியாகுமரி மாவட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், இதற்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் இதற்குகாரணம் என மருத்துவ மாணவி கடிதம் எழுதி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், அவர் நேற்று (06.10.23) வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்துள்ளதாக சக மாணவிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும்,அவர் கல்லூரிக்குச் செல்லாதது குறித்து தகவல் அறிந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதியம் 2 மணி அளவில் அந்த மாணவி தங்கியிருக்கும் ஹாஸ்டலில் சென்று பார்த்தபோது சுகிர்தா இருந்த அறை உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தாக தகவல்.இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் குலசேகரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அறை கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுகிர்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.உடனே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் போது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தை தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அவரது அறையில் தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஆங்கில கடிதம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த கடிதம் குறித்து காவல்துறையினர் விசாரித்து கூறுகையில், "தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என மருத்துவ மாணவி கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளார் என்றும் அதில் ஒரு ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என காவல் துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என பொதுமக்களும், மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் இதை உணர வேண்டுமென்பதே "சென் நியூஸ்" செய்திபிரிவின் விருப்பம் ......
