மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற
இந்த போட்டியில் முதல் மூன்று பரிசுகளை எஸ்எம்ஆர்வி,அமிர்தா. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவர்கள் பெற்றனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை அடுத்து 35 கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாடரேட்டர் ஞானதாசன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது . நிகழ்ச்சியை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மேயருமான மகேஷ் துவக்கி வைத்தார். பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி வரவேற்று பேசினார் .பொறியாளர் அணிதுணை அமைப்பாளர்கள் வெங்கடேசன் பெனில் முரளி துணைத் தலைவர் பழனி மாவட்டத் தலைவர் ராஜேஷ் ரெத்தினமணி பகுதி செயலாளர்கள் ஜவகர் வட்டச் செயலாளர் வேல்முருகன் மாமன்ற உறுப்பினர் கலா ராணி ஆகியோர் முன்னிலை வைத்தார்கள் .296 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தலா 3 முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசுகளும் வழங்கப்பட்டன. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான போட்டியில் முதல் பரிசு எஸ் எம் ஆர் வி தொழில்நுட்பக் கல்லூரி மாணவிமஞ்சுஷா .இரண்டாம் பரிசு பொன்ஜெசிலிபொறியியல் கல்லூரி மாணவர் லிஜிஸ் புனித சேவியர் கல்லூரி மாணவி அப்ரஜா ஆகியோர் பெற்றனர் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கான போட்டியில் அமிர்தா பொறியியல் கல்லூரி மாணவி அமிர்தா ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவி சகாய கிறிஸ்டினா லயோலோ பொறியியல் கல்லூரி மாணவி ரேவதி ஆகியோர் பெற்றனர் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கான போட்டியில் மொத்த மூன்று பரிசையும் ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜெர்வின்ஸ்சிரிவஸ்டோ சுகஷிபுரூட்ஷிபா அலன்அஷிமாராய் ஆகியோர் பெற்றனர். நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா 10000/ இரண்டாம்பரிசாக தலாரூ 5000/ மூன்றாம் பரிசாக தலா ரூ.3000/ வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மேயர் மகேஷ் வழங்கினார். தொடர்ந்து போட்டியில்பங்கேற்ற அத்தனை பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில்முன்னாள் எம் பி யும் மாநில மகளிர் அணி செயலாளர்ஹெலன் டேவிட்சன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மாநில அமைப்பாளர்கள் தாமரைபாரதி ஜோசப் ராஜ் சபி சுலைமான் சிவராஜ் மாவட்ட பொருளாளர் கேட்சன் ஒன்றிய கழக செயலாளர் பாபு சுரேந்திர குமார் அணி அமைப்பாளராக சீசன் அருண்காந்த் எம் ஜே ராஜன் முருக பெருமாள் ராஜேஷ்குமார் அறநிலைத்துறை அறங்காவலர் ராமகிருஷ்ணன் தொமுச இளங்கோ விஜயகுமார்
மாநகரச் செயலாளர் ஆனந்த் மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் சிடி சுரேஷ் மாநகராட்சி தலைவர் பன்னீர்செல்வம் இருள் கழக செயலாளர் இளங்கோ ஐயப்பன் புவியூர் காமராஜ் பிரதீப் ராஜேஷ் டேவிட்சன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி நிறைவில் துணை அமைப்பாளர் சங்கர் நன்றி கூறினார் .
