திருவள்ளூர் மாவட்டம்: 10 கோடி மதிப்புள்ள அரசு இடம் ஆக்கிரமிப்பு !!
11/16/2023
0
ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மிட்டணமல்லி கிராமத்தில் வண்ணான் குளம் உள்ளது இந்த குளம் சுமார் 3.5 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது தற்பொழுது வண்ணான் குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் இந்த குளத்தை முழுவதுமாக அளக்காமல் ஒரு ஏக்கர் மட்டுமே சுத்தம் செய்து தூர்வாரி நடைபாதை அமைத்து வருகின்றன இந்த குளத்தில் மீதும் உள்ள 2.5 ஏக்கர் நிலத்தை விற்பனை நிளமாக பிரித்து விற்பனை செய்ய சமூக விரோதிகள் திட்டம் விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றன இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆவடி மாநகராட்சி தமிழ்நாடு முறைமாமன்றம் முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார் இந்த இடத்தின் மதிப்பு சுமார் 10 கோடி மதிப்பு என்று குறிப்பிட்டுள்ளார் இருப்பினும் ஆகிரமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்த சமூக ஆர்வலரை தாக்க முயன்றுள்ளனர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை என்றார் காரணம் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூட்டாக செயல்படுகின்றனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றன இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வாய்க்கால் அரசு இடங்கள் உள்ளிட்டவைகளை மீட்டு எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் இந்த அரசுக்கு சொந்தமான இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் இவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா பொறுத்திருந்து பார்ப்போம்
.jpg)