நம்மைக் காக்கும் 48' திட்டத்தில் பயனடைந்த 2 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் திரு, மா.சுப்பிரமணியன்.
இலக்கை நோக்கிய பயணத்தில் 'நம்மைக் காக்கும் 48'.
“இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் மூலம் பயன் அடைந்த 2 லட்சமாவது பயனாளியான ஐசக்ராஜா என்பவரை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் திருமிகு, மா.சுப்பிரமணியன்.
இந்த திட்டத்தின் கீழ் விபத்து நடந்த 48 மணி நேரத்திற்குள், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களுக்கான மருத்துவச் செலவுகளை இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
