நாமக்கல் மாவட்டம்
பள்ளிபாளையம் காகித ஆலை செல்லும் சாலையில் அம்மன் நகர் என்ற பகுதியில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆடி மாதத்திலும் வெகு விமர்சையாக இந்த கோயில் திருவிழா நடைபெறும் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் அரசுக்கு சொந்தமான கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கம் போல கோயில் பூசாரி ராஜ் கமல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும்,உள்ளே சென்று பார்த்தபொழுது இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து உண்டியல் காணிக்கைகள் திருடி செல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கும், பள்ளிபாளையம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கோவிலில் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் பூட்டை அருகில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 35 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கை தொகையை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
